×

மீஞ்சூரில் தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி


பொன்னேரி: மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில், துணைத் தலைவர் அலெக்சாண்டர், செயல் அலுவலர் மகேஸ்வரி முன்னிலையில், பேரூராட்சி கவுன்சிலர்கள் பரிமளம் அருண், கவிதா சங்கர், சங்கீதா சேகர், ரஜினி, ராஜன் மற்றும் முதன்மை நிலை அலுவலர் அன்பரசு மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில், இந்திய அரசியல் அமைப்பின் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன், குடிமகள்கள் ஆகிய நாங்கள், நமது அரசியல் அமைப்புப்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவோம்.

தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் சமூக வேற்றுமையை கடைபிடிக்க மாட்டோம், சமயவேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவது எங்களது கடமையாகும் என்பதையும், இந்திய அரசியல் அமைப்பு மீது எங்களுக்கு இருக்கும் முழுப்பற்றோடு, எப்போதும் எடுத்துக்காட்டாக விளங்குவோம் என கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

The post மீஞ்சூரில் தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Minjur ,Ponneri ,Minjur Special Status Town Panchayat ,President ,Rukmani Mohanraj ,Vice President ,Alexander ,Executive Officer ,Maheshwari ,Panchayat ,Councilors ,Parimalam Arun ,Kavita Shankar ,Sangeetha Shekhar ,Rajini ,Rajan ,Dinakaran ,
× RELATED நேரு சிலை அகற்றம் எம்பியிடம் காங்கிரசார் மனு