×

பாஜ, ஆர்எஸ்எஸ்.சின் கொள்கை பரப்பு செயலாளராக தமிழக கவர்னர் செயல்படுகிறார்: துரை வைகோ எம்பி பேட்டி

பெரம்பூர்: மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான வைகோவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 40 லட்சம் செலவில், சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்கள் உடற்பயிற்சி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் எம்பிக்கள் துரை வைகோ, கலாநிதி வீராசாமி, ஆர்.டி.சேகர் எம்எல்ஏ கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட துரை வைகோ கூறியதாவது;
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது. ஒரு சில குற்றங்கள் நடைபெற்றாலும் அவ்வப்போது தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர் ஆளுநர் போல செயல்படாமல் பாஜ, ஆர்எஸ்எஸ்சின் கொள்கை பரப்பு செயலாளர் போல செயல்பட்டு வருகிறார். ஆளுநர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேச உள்ளேன்.

வக்ப் சட்டதிருத்த மசோதாவிற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் கொடுக்க இருக்கிறது. தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய நிதியை ஒன்றிய அரசு முறையாக வழங்குவது இல்லை. பேரிடர் நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி, பள்ளிக்கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதி, 100 நாள் வேலை திட்டத்துக்கு வழங்கவேண்டிய நிதி ஆகிய நிதிகளை வழங்காமல் திமுக அரசுக்கு அவப்பெயரை உண்டு செய்யும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இதுகுறித்தும் நாடாளுமன்றத்தில் பேச உள்ளோம். இவ்வாறு கூறினார்.

The post பாஜ, ஆர்எஸ்எஸ்.சின் கொள்கை பரப்பு செயலாளராக தமிழக கவர்னர் செயல்படுகிறார்: துரை வைகோ எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : RSS ,Tamil Nadu ,Governor ,Sin Policy Press ,Durai Waiko ,Perampur ,Constituency Development Fund of Vigo ,General Secretary ,Chennai Rampur Assembly Constituency ,Baja ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED மோடி தலைமையிலான பா.ஜ.க.அரசின் பல்வேறு...