×

முன்னாள் தாதா சேராவின் மகன் கைது..!!

சென்னை: சென்னையைச் சேர்ந்த முன்னாள் தாதா சேராவின் மகனான கூலிப்படை தலைவன் கதிர் கைது செய்யப்பட்டார். பிரபல கூலிப்படை தலைவன் கதிரை ஆந்திர மாநிலம் நகரியில் போலீசார் கைது செய்தனர். கதிரை சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையரின் அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைதுசெய்தனர். கதிர் மீது 2 கொலை, 6 கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 14 வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

The post முன்னாள் தாதா சேராவின் மகன் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Former Dada Chera ,Chennai ,Former ,Dada Chera ,Kathir ,Nagari, Andhra Pradesh ,North Additional Commissioner of Police… ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு