×

பொய் புகாரில், போக்சோ நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பொய் புகாரில், போக்சோ நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன் மகளை காதலிப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அது தொடர்பான புகைப்படங்களை காட்டி மீண்டும் மீண்டும் தொல்லை அளித்து வந்ததாகவும் கடந்த 2018ம் ஆண்டு போத்தனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் குமார் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தது கோவை போக்சோ நீதிமன்றம். இதை எதிர்த்து குமார் மேல்முறையீடு செய்ததில் உண்மை வெளிவந்துள்ளது. பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுபவரின் சகோதரியை, குமார் காதலித்து வந்ததால் அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

The post பொய் புகாரில், போக்சோ நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Boxo court ,Chennai ,Dinakaran ,
× RELATED கிராம நத்தம் நிலத்தில் யாரும்...