×

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை பிரபல யூடியூபர்கள் திவ்யா, கார்த்தி கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரபல யூடியூபர்கள் திவ்யா, கார்த்தி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக பிரபல யூடியூபர்கள் தஞ்சாவூரை சேர்ந்த திவ்யா (30), சென்னையை சேர்ந்த சித்ரா (45) மற்றும் வில்லிபுத்தூரை சேர்ந்த ஆனந்த் (24), ஈரோட்டை சேர்ந்த கார்த்தி (40) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை பிரபல யூடியூபர்கள் திவ்யா, கார்த்தி கைது appeared first on Dinakaran.

Tags : Divya ,Karthi ,Srivilliputhur ,Srivilliputhur, Virudhunagar district ,District ,Child Protection Officer… ,
× RELATED யூடியூபர் திவ்யா உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் கைது