×

இலங்கையில் ஆட்சி மாறிய பிறகும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது: முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக, புதுவை மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் சட்டவிரோத தாக்குதலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இலங்கை கடற்படையின் அத்துமீறல் நடவடிக்கையை வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது. இலங்கை தூதர் அழைத்தும் பேசப்பட்டுள்ளார். இருப்பினும் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் நேரடித் தாக்குதல் குறைந்தபாடில்லை. இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலைக்கு மாறாக தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் அத்துமீறலும், மீனவர்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் சேதாரம் ஏற்படுத்தும் வன் தாக்குதலும் தொடர்வது ஏமாற்றம் அளிக்கிறது. மீன்பிடி உரிமை தொடர்பாக இருநாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதுடன், தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட அரசியல் உறுதியுடன் ராஜிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை இந்திய கம்யூனிஸ்டு கேட்டுக் கொள்கிறது.

The post இலங்கையில் ஆட்சி மாறிய பிறகும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sri Lanka ,Mutharasan ,Chennai ,Communist Party of India ,State Secretary ,Sri Lankan Navy ,Puducherry ,Ministry of External Affairs ,Sri ,Lankan ,Dinakaran ,
× RELATED நியூசிக்கு எதிரான முதல் டி20 இலங்கை மகளிர் இமாலய வெற்றி