×

திருவொற்றியூர் மாணிக்கம் நகரில் ரயில்வே சுரங்கப்பாதை சாலை சேதம்: மாணவ, மாணவிகள் தவிப்பு

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மண்டலம் மாணிக்கம் நகரில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை வழியாக அம்பேத்கர் நகர், ராஜா சண்முகம் நகர், சண்முகபுரம் உள்பட 50க்கும் மேற்பட்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சுரங்கபாதையின் சாலை பழுதடைந்து மேடு, பள்ளமாக கிடப்பதால் வாகனங்களில் செல்லமுடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சுரங்கப்பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சி மற்றும் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவொற்றியூர் மாணிக்கம் நகரில் ரயில்வே சுரங்கப்பாதை சாலை சேதம்: மாணவ, மாணவிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvottriyur Manickam city ,Thiruvottriyur ,Ambedkar Nagar ,Raja Shanmugam Nagar ,Shanmugampuram ,Manickam city ,Chennai ,Thiruvottriyur Manickam ,
× RELATED சாலையோரம் நிறுத்தி இருந்த கன்டெய்னர்...