×

பொய்கை மாட்டு சந்தையில் பொங்கலுக்கு பிறகு ₹80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

*வியாபாரிகள் தகவல்

வேலூர் : வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று ₹80 லட்சத்திற்கு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை தமிழகத்தில் உள்ள சந்தைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.இந்நிலையில் வழக்கம்போல் நேற்றும் மாட்டுச்சந்தை கூடியது. இதில் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 1300க்கும் மேற்பட்ட மாடுகளும், 300க்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இதன் காரணமாக நேற்று ஒட்டுமொத்தமாக பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை ஏறத்தாழ ₹80 லட்சம் தாண்டியதாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று(நேற்று) 1300க்கும் மேற்பட்ட மாடுகள், 300க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது. வர்த்தகத்தை பொறுத்தவரை பொங்கல் பண்டிகைக்கு பிறகு சற்று குறைந்துள்ளது. கறவை மாடுகளுடன், காளைகளும் சுமார் ₹80 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது’ என்றனர்.

The post பொய்கை மாட்டு சந்தையில் பொங்கலுக்கு பிறகு ₹80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Livestock ,Pongal ,Lie Cow Market ,Vellore ,Lie Beef ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்க்க...