×

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம்.. திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம்: யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்!!

உத்தரப் பிரதேசம்: திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் நிலையில், இன்று தை அமாவாசையையொட்டி, அதிகாலையிலேயே பல லட்சம் பக்தர்கள் திரண்டனர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த பெண்கள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் 70க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; பிரயாக்ராஜுக்கு வரும் பக்தர்கள், உங்களுக்கு அருகிலுள்ள கங்கை ஆற்றில் நீராடுங்கள். திரிவேணி சங்கமம் நோக்கிச் செல்ல முயற்சிக்காதீர்கள். நீங்கள் அனைவரும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஏற்பாடுகளை செய்வதில் ஒத்துழைக்க வேண்டும். சங்கத்தின் அனைத்து படித்துறைகளிலும் மக்கள் அமைதியாகக் குளித்து வருகின்றனர். எந்த வதந்திகளுக்கும் கவனம் செலுத்த வேண்டாம் எனப் பதிவிட்டுள்ளார்.

The post மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம்.. திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம்: யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்!! appeared first on Dinakaran.

Tags : Maha Kumbh Mela crowd incident ,Triveni Sangam ,Yogi Adityanath ,Uttar Pradesh ,State Chief Minister ,Maha Kumbh Mela ,Prayagraj, Uttar Pradesh ,Maha Kumbh Mela crowd ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்