×

சவர தொழிலாளர்களுக்கு கலைஞர் கைவினை திட்ட விழிப்புணர்வு

திருப்போரூர்: தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தொழில் மையம் இணைந்து தமிழக அரசின் கலைஞர் கைவினை திட்டத்தின் விழிப்புணர்வு முகாம் நேற்று மேடவாக்கம் பாவலரேறு தமிழ் தளம் வளாகத்தில் நடந்தது. தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் ருக்மாங்கதன் வரவேற்றார்.

முகாமில், செங்கல்பட்டு மாவட்ட தொழில் மைய மேலாளர் மா.வித்யா கலந்துகொண்டு, கலைஞர் கைவினை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு 3 லட்சம் கடன் உதவி வழங்கப்படும் திட்டம் குறித்தும், அந்த கடன் தொகையில் 50 ஆயிரம் தள்ளுபடி மற்றும் 5 சதவீத வட்டி தள்ளுபடி குறித்து தொழிலாளர்களுக்கு விளக்கினார். மேலும், கலைஞர் கைவினைத் திட்டம் குறித்த தொழிலாளர்களின் சந்தேகங்கள் மற்ற தொழிற்கடன்கள் குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கலைஞர் கைவினைத் திட்டத்தில் பதிவு செய்தனர். முகாமில் செங்கல்பட்டு மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர்கள் வினோத், பிரதீப், தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் மாநில முதன்மை செயலாளர் தனசேகரன், மாநில துணை தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் ராஜீவ்காந்தி நன்றி கூறினார்.

The post சவர தொழிலாளர்களுக்கு கலைஞர் கைவினை திட்ட விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Shaving Workers Association Kanchipuram ,Chengalpattu District ,Chengalpattu District Industrial Center ,Tamil Nadu Government ,Pavalareru Tamil Dal ,Medavakkam ,Tamil Nadu Shaving Workers… ,Shaving Workers ,
× RELATED பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது