×

வட்டன்விளை கோயில் கொடை விழா

உடன்குடி, ஜன. 29: பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை பாதக்கரை முத்துசுவாமி கோயில் கொடை விழா, 3 நாட்கள் நடந்தது. கடந்த 27ம் தேதி மாலையில் சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனையுடன் விழா தொடங்கியது. நேற்று (28ம் தேதி) பாதக்கரை முத்துசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, வில்லிசை, சுவாமி வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று காலையில் கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரர்களுக்கு வரி பிரசாதம் வழங்கல் நடக்கிறது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post வட்டன்விளை கோயில் கொடை விழா appeared first on Dinakaran.

Tags : Vattanvilai Temple Donation Festival ,Udangudi ,Vattanvilai ,Padakkarai ,Muthuswamy Temple ,Paramankurichi ,Padakkarai Muthuswamy ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி