×

கேரளாவில் மதுபான விலை உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் விஸ்கி, பிராந்தி, ரம், பீர், ஒயின் உள்பட இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளை கேரள மதுபான விற்பனைக் கழகம் விற்பனை செய்து வருகிறது. கேரளா முழுவதும் 350க்கும் மேற்பட்ட சில்லறை மதுபான விற்பனைக் கடைகளும், 500க்கும் அதிகமான பார்களும் உள்ளன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் முதல் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு கேரள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

The post கேரளாவில் மதுபான விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kerala Liquor Marketing Corporation ,
× RELATED ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரே...