×

நம் அரசியல் மேடை போகும் திசை மிகவும் வருத்தம் அளிக்கிறது: புதுக்கோட்டையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேச்சு

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
சீனா உருவாக்கியுள்ள AI கருவி உலகத்தையே தற்போது உலுக்கி வருகிறது. நாமோ இன்னும் மலை மீது போய், இந்த சாமி இருக்கிறது, அந்த சாமி இருக்கிறது என பேசிவருகிறோம். பெரியார் சர்ச்சையும் தேவையில்லாததுதான்.

பொருளாதாரம், வேலையின்மை என அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளன. ஆனால், என்ன உணவு சாப்பிட வேண்டும், தனிமனித உரிமைகள் இவைகள்தான் சர்ச்சை ஆகின்றன. நம் அரசியல் மேடை போகும் திசை மிகவும் வருத்தம் அளிக்கிறது. விஞ்ஞான ரீதியான, அறிவுபூர்வமான பொருளாதாரம் குறித்த விவாதங்கள் நடக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.

திரைப்படத்தில் கவுரவத் தோற்றம் போல் அரசியலில் விஜய் வந்து செல்கிறார். பாஜக யாரையாவது வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறதே தவிர யாரும் விரும்பி போய் சேருவது இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கூட்டணி கட்சியின் வாக்கு வங்கியும் குறையும் என்பது உண்மை என அவர் கூறினார்.

The post நம் அரசியல் மேடை போகும் திசை மிகவும் வருத்தம் அளிக்கிறது: புதுக்கோட்டையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Pudukkotka ,Congress ,B. Karti Chidambaram ,Sivaganga Constituency ,M. B. Karti Chidambaram ,Pudukkotta ,China ,M. B. Karthi Chidambaram ,
× RELATED செல்வப்பெருந்தகை பிறந்தநாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வாழ்த்து