×

முல்லைபெரியாறு அணை கட்டப்பட்டு 130 ஆண்டுகள் ஆகியும் அணை உறுதியாக உள்ளது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த அணை என்பது உறுதியாக இல்லை. எனவே அந்த அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு மட்டுமின்றி ஜாய் ஜோசப் என்பவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், முல்லை பெரியாறு மிகவும் பாதுகாப்பாக உள்ளது.

முல்லைபெரியாறு அணை உறுதியாக உள்ளதாக ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த குழு தொடர்ந்து ஆய்வுகளை செய்து வருகிறது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும். அல்லது முல்லை பெரியாறு தொடர்பான மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஆனால், மனுதாரப்பில் கேரளாவில் தொடர்ந்து மழை பொழிவு அதிகரித்துவருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. எனவே அணையின் நீர்மட்டத்தை குறைப்பது மட்டுமின்றி புதிய அணையை கட்டுவதற்கான முடிவை அறிவிக்க வேண்டும் என வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்: 130 ஆண்டுகளுக்கு மேல் ஆன அந்த அணை எத்தனை பருவமழைகளை கண்டுள்ளது. அணை உறுதியாக உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் அணை உடைந்து விடும் என மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறுவது காமிக் கதைகள் போல் உள்ளது என கூறினார்.

நானும் கேரளாவில் வசித்திருக்கிறேன். முல்லைப்பெரியாறு அணை நமது வயதை விட 2 மடங்கு பழமையானதாக இருந்தாலும், அது நிலையானதாக, உறுதியாக உள்ளது. பல பருவமழையை கண்டிருந்தாலும் அணை உறுதியாக உள்ளது. அந்த அணையை கட்டிய பொறியாளருக்கு நாம் நன்றி கூற வேண்டிய கடமை பெற்றிறுக்கிறோம் என நீதிபதிகள் கூறினர்.

மேலும் முல்லைபெரியாறு தொடர்பாக வேறு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டனர்.

The post முல்லைபெரியாறு அணை கட்டப்பட்டு 130 ஆண்டுகள் ஆகியும் அணை உறுதியாக உள்ளது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Mullaiberiyaru Dam ,Supreme Court ,Delhi ,Mullipiyaru Dam ,Kerala government ,Joy Joseph ,Dinakaran ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...