- மனிதாபிமான வாரம்
- அரசு கல்லூரி
- சிவகங்கை
- வாரம்
- சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி
- காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு
- ADSP
- கலைகதிரவன்
- மாவட்ட அரசு
- சிறப்பு
- துஷாந்த்…
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லூரியில் போலீசார், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் மனித நேய வார விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஏடிஎஸ்பி கலைகதிரவன் தலைமை வகித்தார். விழாவில் மாவட்ட அரசு சிறப்பு வழக்கறிஞர் துஷாந்த் பிரதீப்குமார், கல்லூரி முதல்வர் இந்திரா, சிவகங்கை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கண்காணிப்பாளர் கோபிநாத், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் பூமிநாதன் ஆகியோர் பேசினர்.
மாய்ந்துவிடவில்லை மனித நேயம் என்ற தலைப்பில் மெகா ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் ஆசிகா பர்வீன், ரேணுகா காந்தி, பூமிகா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். நிகழ்ச்சியை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியியல் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். எஸ்எஸ்ஐ பிரேமலதா நன்றி கூறினார்.
The post அரசு கல்லூரியில் மனித நேய வார விழா appeared first on Dinakaran.
