×

மனு கொடுக்கும் போராட்டம்

 

மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் 2வது பிட் பகுதியில் பிட்-2 டொம்பர் இன மக்களுக்கு கடந்த 2020 ல் அரசின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக் கோரியும், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட ஆதிதமிழர் பேரவை சார்பில் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விடுதலை சேகரன் தலைமை வகித்தார்.

மாநகர் மாவட்ட செயலாளர் ஆதவன் முன்னிலை வகித்தார். தே.கல்லுப்பட்டி ஒன்றிய தலைவர் மதுரைவீரன், திருமங்கலம் ஒன்றியசெயலாளர் கண்ணன், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில து.பொதுசெயலாளர் கார்த்திக், கொ.ப.செயலாளர் தலித்ராசா உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நிறைவில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

The post மனு கொடுக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,2nd Pit ,Peraiyur, Madurai district ,Pit-2 Domber ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா