×

புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேடல் குழு அமைப்பு

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் உள்ளனர். இதில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாரின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 18ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான நடவடிக்கையை ஒன்றிய அரசு தொடங்கி உள்ளது.

இதற்கு முன், மூத்த தேர்தல் ஆணையர் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, தேடல் குழு பரிந்துரைக்கும் நபர்களில் ஒருவரை தேர்வுக்குழு முடிவு செய்யும். தற்போது, இதற்கான 3 பேர் கொண்ட தேடல் குழுவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் குழுவிற்கு தலைமை வகிக்கிறார். இக்குழு 5 அதிகாரிகள் பெயரை தேர்வுக்குழுவிடம் பரிந்துரைக்கும்.

The post புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேடல் குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner Search Committee ,New Delhi ,Election Commission ,Chief Election Commissioner ,Rajiv Kumar ,Committee ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை...