×

ரயில்வே கூட்ஸ் ஷெட் அலுவலகத்தில் குடியரசு தின விழா

தஞ்சாவூர், ஜன.28: நாட்டின் 76 வது குடியரசு தின விழாவையொட்டி தஞ்சாவூர் ரயில்வே கூட்ஸ் ஷெட் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினார்களாக ரயில்வே கூட்ஸ் ஷெட் வணிக மேற்பார்வையாளர் ராஜ்குமார், பிரவீன், மற்றும் ஒப்பந்த மேலாளர்ஜம்பு, பழனிவேல் கலந்துக் கொண்டனர். மேலும் தொழிலாளர் சங்க செயலாளர் சின்னப்பன், தலைவர் மோகன், பொருளாளர் ராஜசேகர், தணிக்கையாளர் மரியசெல்வராஜ், மற்றும் கூட்ஸ் ஷெட் அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். முடிவில் அனைவருக்கும் காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

The post ரயில்வே கூட்ஸ் ஷெட் அலுவலகத்தில் குடியரசு தின விழா appeared first on Dinakaran.

Tags : Republic Day ,Railway Goods Shed ,Thanjavur ,Thanjavur Railway Goods Shed ,Supervisor ,Rajkumar ,Praveen ,Dinakaran ,
× RELATED 2026ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான...