- நாகப்பட்டினம்
- லலிதாம்பிகா
- வித்யா மந்திர் பள்ளிவாசல்
- நாகப்பட்டினம் லலிதாம்பிகா வித்யா மந்திர் பள்ளி
- ஆர்த்திசந்தோஷ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
நாகப்பட்டினம்,ஜன.28: நாகப்பட்டினம் லலிதாம்பிகா வித்யா மந்திர் பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்பு கண்காட்சி நடந்தது. நாகப்பட்டினம் லலிதாம்பிகா வித்யா மந்திர் பள்ளியின் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஆர்த்திசந்தோஷ் தலைமை வகித்தார். சிக்கல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக பேராசியர் கோபிகண்ணன் மற்றும் பள்ளி தாளாளர் ஆர்த்திசந்தோஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஏராளமான அறிவியல் படைப்புகளை செய்திருந்தனர். பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றனர்.
The post நாகப்பட்டினம் லலிதாம்பிகா வித்யா மந்திர் பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்பு கண்காட்சி appeared first on Dinakaran.
