×

ஓட்டல் ஊழியரை மிரட்டி செல்போன் பறிப்பு

தூத்துக்குடி, ஜன.28: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது(60). இவர் தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 25ம் தேதி அந்த உணவகத்தின் அருகே உள்ள 4 வழிச்சாலையை கடக்க முயன்றாராம். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள், சாகுல் ஹமீதை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஓட்டல் ஊழியரை மிரட்டி செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Sakul Hameed ,Ervadi ,Tirunelveli district ,Vagaikulam ,Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி மாநகரில் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்