சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுதுதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. போராட்டத்தை ஒருங்கிணைப்பது குறித்து வரும் 4 மற்றும் 6ம் தேதிகளில் ஆலோசனை நடத்தப்படும். பிப்ரவரி 14ம் தேதி வட்ட அளவிலும், வரும் பிப்ரவரி 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும் நடத்தப்படும் என ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
The post வரும் பிப்.25ல் மறியல் போராட்டம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு appeared first on Dinakaran.
