சென்னை: இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – எப்15 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுவதையொட்டி இன்று காலை கவுண்டவுன் தொடங்கப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திரமாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து என்விஎஸ்-02 செயற்கை கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி – எப் – 15 ராக்கெட் நாளை காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் மூலம் இஸ்ரோ தனது 100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தி புதிய சாதனையை படைக்கவுள்ளது. இதற்காக இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த என்விஎஸ் – 02 செயற்கைக்கோள் இஸ்ரோவின் கீழ் செயல்படும் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி, 2,250 கிலோ எடையும், 10 ஆண்டுகள் ஆயுட்காலத்தையும் கொண்டுள்ளதாக இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கபப்ட்டுள்ளன. இதில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும், பேரிடா் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என விஞ்ஞானி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி எப்-15 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்டவுன் இன்று காலை 5.23 மணிக்கு தொடங்க உள்ளது. இதன் காரணாமாக ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி – எப்15 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது: கவுண்டவுன் இன்று காலை தொடக்கம் appeared first on Dinakaran.
