- பால் விழா
- போரூர் அய்யா வாரா கோவில்
- பால்
- அய்யா நாரணசுவாமி அதிக தங்கல்
- போரூர்
- தாய்
- ஸ்ரீமான் அய்யா நாரணசுவாமி திருப்பதி அதிக தங்கல்
- ராஜராஜன் தெரு
- பொன்னியம்மன் நகர்
- Karambakkam
- போரூர், சென்னை
- தாய்லாந்து பால் திருவிழா

பூந்தமல்லி: போரூரில் உள்ள அய்யா நாராணசாமி அதிசய தாங்கலில் தை மாதம் பால்முறை திருவிழா நடைபெற்றது. சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் பொன்னியம்மன் நகர், ராஜராஜன் தெருவில் ஸ்ரீமன் அய்யா நாராணசாமி திருப்பதி அதிசய தாங்கல் என்னும் அய்யா வழி கோயில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டு தோறும் தை மாதம் பால்முறைத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த கோயிலில் பிரார்த்தனை செய்து வழிபாடு செய்வதால் தீர்வு கிடைப்பதாக கூறி ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த ஆண்டிக்கான பால்முறை திருவிழா நேற்றுமுன்தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதையடுத்து இந்த ஆண்டும், பால் பணிவிடை, உகபடிப்பு, மதியம், பணிவிடை, உச்சிபடிப்புடன், உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு வழிபாடு, மற்றும் அன்னதர்மமும் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தாங்கல் பொறுப்பாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார். போரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரம் பேருக்கு புடவை மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post போரூர் அய்யா வழி கோயிலில் தை பால்முறை திருவிழா appeared first on Dinakaran.
