×

திருமழிசை பேரூராட்சியில் ரூ1.24 கோடியில் பேரூராட்சி அலுவலக கட்டிடப் பணி: அமைச்சர், எம்எல்ஏ அடிக்கல்


திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் ரூ1.24 கோடி மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை, அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். திருமழிசை பேரூராட்சியில் தமிழக அரசின் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ1.24 கோடி மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்றார்.

திமுக ஒன்றியச் செயலாளர் கமலேஷ், பேரூர் செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர். இதில் திமுக பேரூர் நிர்வாகிகள் அருள், சுரேந்தர், சண்முகம், இளங்கோவன், கங்காதரன், ரேவதி, நாகராஜ், மோகன்ராஜ், கோபு, ஆனந்தராஜ், ராஜா பேரூராட்சி கவுன்சிலர்கள் ரவி ராஜேஷ், ஜீவா சதிஷ், மஞ்சுளா பாஸ்கர், வார்டு செயலாளர்கள் வேலு, வெங்கடேசன், தென்னரசு, ஹரிகிருஷ்ணன், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருமழிசை பேரூராட்சியில் ரூ1.24 கோடியில் பேரூராட்சி அலுவலக கட்டிடப் பணி: அமைச்சர், எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Minister ,Avadi S.M. Nassar ,A. Krishnasamy ,MLA ,Tamil Nadu government ,Thiruvallur… ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...