×

கொசப்பூர் அருகே உள்ள புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

திருவொற்றியூர்: சென்னை மணலி மண்டலம் 17வது வார்டு கொசப்பூர் அருகே புழல் ஏரி உபரிநீர் கால்வாய் நிரம்பும்போது உபரி நீர் திறக்கப்பட்டு கடலில் விடப்படுகிறது. மாத்தூர் எம்எம்டிஏ உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் குடியிருப்பை சுற்றி தேங்காமல் இருக்க கொசப்பூர் உபரி நீர் கால்வாயில் வந்து கலக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு தடுப்பணையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கொசப்பூர் அருகே உள்ள தடுப்பணைக்கு அருகே தனியார் நிறுவனங்களில் இருந்து கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதன்காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் கால்நடை கழிவுகளை தின்பதற்காக நாய்களும் பன்றிகளும் ஓடிவருவதால் வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், மணலி மண்டல அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, ‘’சில தனியார் நிறுவனங்கள் திருட்டுத்தனமாக வந்து சாலையோரங்களில் கழிவுகளை கொட்டி வைத்து விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது’ என்றனர்.

The post கொசப்பூர் அருகே உள்ள புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் கழிவுகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Worm Lake ,Kosapur ,Chennai Manali Zone 17th Ward Kosapur ,STAGNATING ,MATUR ,MMDA ,
× RELATED கொசப்பூர் உபரிநீர் கால்வாய்...