சென்னை: பிரபாகரனுடன் சீமான் உள்ள போட்டோ போலியானது என கரு.அண்ணாமலை தெரிவித்துள்ளார். “ஈழப்போர் முடிவை நெருங்கி விட்டது; போட்டோ கிடைக்க வாய்ப்பில்லை என்றேன். கிராபிக்ஸ் செய்வதை தவிர வேறு வழியில்லை என சீமானிடம் சொன்னேன்.சொன்ன 4வது நாளில் கிராபிக்ஸ் செய்து போலி போட்டோவை வெளியிட்டார் சீமான். இயக்குநர் களஞ்சியத்திடம் 10 ஆண்டுகளுக்கு முன்பே புகைப்படம் போலி எனச் சொன்னேன். இது கிராபிக்ஸ் செய்யப்பட்ட ஃபோர்ஜரி போட்டோ என்பது களஞ்சியத்துக்கு தெரியும். பணம் ஒன்றுதான் சீமானுக்கு ஒரே குறிக்கோள். சங்ககிரி ராஜ்குமார் சொன்னது உண்மைதான்” என கரு.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
The post பிரபாகரனுடன் சீமான் உள்ள போட்டோ போலியானது: கரு.அண்ணாமலை appeared first on Dinakaran.