- டி 20
- இலங்கை
- சுழல்
- 'வனிந்த் ஹசரங்கா
- அபுதாபி
- வனிந்து ஹசரங்கா
- இலங்கை அணி
- இலங்கை
- T20 லீக்
- இலங்கை
- 'சுவிர்ல்' வனிந்த் ஹசரங்கா
- தின மலர்
அபுதாபி: இலங்கை அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா. அவர் இலங்கை அணிக்காக டி20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி அதிக விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். அதே சமயம் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் தொடர்களிலும் வனிந்து ஹசரங்கா பங்கேற்று வருகிறார். அவர் இதுவரை 209 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் ஒட்டுமொத்தமாக 301 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார். தற்போது அவர் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் விளையாடி வருகிறார்.
இந்தத் தொடரில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்காக விளையாடி வரும் வனிந்து ஹசரங்கா ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதன் மூலம் 209 டி20 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். வனிந்து ஹசரங்கா ஒட்டுமொத்தமாக 201 டி20 இன்னிங்ஸ்களில் 301 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மூன்று முறை 5 விக்கெட் மற்றும் 9 முறை நான்கு விக்கெட் எடுத்து சாதனைகளை செய்து இருக்கிறார். மேலும், ஆல் ரவுண்டராகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இதுவரை 2335 ரன்களை 145.21 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து இருக்கிறார். 9 அரை சதங்களை அடித்து இருக்கிறார்.
இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை 211 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் 213 போட்டிகளில் 300 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை கடந்து இருந்தார். அவர்கள் இருவரையும் முந்தி இருக்கும் வனிந்து ஹசரங்கா உலகிலேயே விரைவாக 300 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை செய்திருக்கிறார். சர்வதேச டி20 போட்டிகளில் 131 விக்கெட்களை வீழ்த்தியுள்ள வனிந்து ஹசரங்கா, ஐபிஎல் தொடரில் 26 போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
The post டி 20 போட்டிகளில் 300 விக்கெட்: இலங்கை ‘சுழல்’ வனிந்து ஹசரங்கா பிரமாண்ட சாதனை appeared first on Dinakaran.