- பாரடைஸ் கேட்
- 76 வது குடியரசு தினம்
- திருமலா
- 76வது குடியரசு தின விழா
- திருமலை கோகுலம் கெஸ்ட் ஹவுஸ்
- வெங்கையா சவுத்ரி
- 76வது குடியரசு தின விழா
- வாயில்
*கூடுதல் செயல் அதிகாரி பேச்சு
திருமலை : திருமலை கோகுலம் கெஸ்ட் ஹவுஸில் 76வது குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து, தேவஸ்தான விஜிலென்ஸ் பாதுகாப்பு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவ்வப்போது செயல்படுத்தும் பல்வேறு ஏற்பாடுகள் குறித்து பக்தர்களிடமிருந்து பீட்பேக் கேட்டு அதற்கேற்ப பக்தர்களுக்கு மிகவும் வசதியான தரிசனம் மற்றும் பிற வசதிகளை வெளிப்படையான முறையில் வழங்குவதே எங்கள் நோக்கம்.
உலகம் முழுவதிலுமிருந்து சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க ஊழியர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். பக்தர்களின் வசதிக்காக உணவு பிரசாதம் மற்றும் வரிசைகளை நிர்வகிப்பதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு சிறந்த தரமான உணவுப் பிரசாதங்களை வழங்குவதற்காக அதிநவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை 6.80 லட்சம் பக்தர்கள் வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்தனர். இந்த 10 நாட்களில் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட பீட்பேக்கில் 96 சதவீத பக்தர்கள் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்ததாகக் தெரிவித்துள்ளனர்.
திருமலையில் தங்குமிட அறைகள் ஒதுக்கீட்டில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும். சில ஓய்வறைகள் பழுதுபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். திருமலையில் அன்னதானம், சுகாதாரம், மின்சாரத் துறை, தோட்டக்கலைத் துறை போன்ற துறைகள் சிறப்பாகச் செயல்பட்டு கூட்டு முயற்சிகள் மூலம் அனைத்துத் துறைகளிலும் 100 சதவீதம் சிறந்த சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவஸ்தான ஐ.டி. துறையை வலுப்படுத்தவும், பக்தர்களுக்கு எளிதான முறையில் சேவைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சமீபத்தில் அறிமுகப்படுத்திய இ-உண்டியல் முறை நல்ல பலனைத் தருகிறது. திருமலையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கியோஸ்க்களில் பக்தர்கள் யூ.பி.ஐ. மூலம் எளிதாக நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
திருமலைக்கு தினமும் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் வசதிகளில் சில நேரங்களில் சிறிய சிக்கல்கள் உள்ளது. இதுபோன்ற சவால்களை சமாளித்து பக்தர்களுக்கு வசதியான சேவைகளை வழங்க அயராது பாடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் சத்யநாராயணா, வி.ஜி.ஓ.க்கள் ராம்குமார், சுரேந்திரா, கண்காணிப்பாளர்கள் துளசி, ராமசந்திரா மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள்கலந்து கொண்டனர். முடிவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
The post திருமலையில் 76வது குடியரசு தின விழா சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகளில் 96 சதவீதம் பக்தர்கள் திருப்தி appeared first on Dinakaran.