×

வெ.இண்டீசுடன் மோதல் தோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்

முல்தான்: பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் பாக். வென்றது. கடந்த 25ம் தேதி துவங்கிய 2வது டெஸ்ட்டின் முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 163 ரன்னும், பாகிஸ்தான் 154 ரன்னும் எடுத்தன. 2ம் நாளான நேற்று, 2வது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 254 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாக். 2வது இன்னிங்சை துவக்கியது. ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 76 ரன் மட்டுமே எடுத்த பாக். தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

The post வெ.இண்டீசுடன் மோதல் தோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Indies ,Multan ,West Indies ,Audi ,Pak ,Dinakaran ,
× RELATED வரும் 31ம் தேதிக்குள் ஆப்கான் நாட்டினர் வெளியேற கெடு விதித்தது பாகிஸ்தான்