- Namakal
- ஐஏஎஸ்
- அகல்யா
- மோகனூர் ரசிகுமாரிபாளையா
- நாமக்கல் மாவட்டம்
- மீ.
- ஆ. அ.
- நாமக்கல்
- ஏ. எஸ். ராஜா
- பட்டி முல்லா
நாமக்கல்: பட்டதாரி பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் ராசிகுமாரிபாளையத்தைச் சேர்ந்தவர் அகல்யா(27). எம்.பி.ஏ., பட்டதாரியான இவருக்கும், நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை முல்லை நகரை சேர்ந்த ராஜா (35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், இருவரும் நாமக்கல்லில் வசித்து வந்தனர். ராஜா தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்றும், கலெக்டர் அந்தஸ்தில் இருப்பதாகவும், அதற்கு முன்பாக ஐதராபாத் மண்டலத்தில் ஸ்டேட் வங்கியில் மண்டல மேலாளராக இருந்ததாகவும், மாதம் ₹1.80 லட்சம் சம்பளம் வாங்குவதாகவும் கூறி, திருமணம் செய்துள்ளார். மேலும், கலெக்டர், நோடல் ஆபீசர், பேங்க் மேனேஜர் ஆகிய அடையாள அட்டைகளை காண்பித்துள்ளார்.
ஆனால், திருமணத்திற்கு பின், ராஜா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், சந்தேகம் அடைந்த அகல்யா, அதுகுறித்து விசாரித்தபோது, ராஜா அவரை ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து கேட்ட போது, ராஜா அவரை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதையடுத்து, அகல்யா, மோகனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். போலீசிலும் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, ராஜாவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post பெண்ணை ஏமாற்றி திருமணம் போலி ஐஏஎஸ் கைது appeared first on Dinakaran.