- ஜனநாயகத்தை வெல்வதற்கான விசிகா கிராண்ட்
- ஸ்டாலின்
- திருச்சி
- வென்ற
- விக்கி
- திருச்சி சிறுகானூர்
- வெள்ளி
- மணி
- இந்தியா
- தின மலர்
திருச்சி: திருச்சி சிறுகனூரில் விசிக சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் பிரமாண்ட மாநாடு இன்று (26ம் தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது. கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, கட்சி தலைவரின் மணிவிழா, இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என்று முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடக்கிறது.
விசிக தலைவர் திருமாவளவன் தலைமை வகிக்கிறார். பொது செயலாளர் சிந்தனை செல்வன் வரவேற்கிறார். பொது செயலாளர் ரவிக்குமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகிறார். மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மேலும் இந்தியா கூட்டணியின் தலைவர்களான அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொது செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பொது செயலாளர் திபங்கர் பட்டாச்சாரியா, திக கி.வீரமணி ஆகியோர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசைதம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், சிவசங்கர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் எம்பிக்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் விசிகவினர் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு திருச்சி ஏர்போர்ட்டுக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் சிறுகனூருக்கு செல்கிறார். முன்னதாக டிவிஎஸ் டோல்கேட்டில் நேற்று திறக்கப்பட்ட கலைஞர் சிலையை பார்வையிட்டு மரியாதை செலுத்துகிறார். மாநாட்டுக்காக 50 ஏக்கர் பரப்பளவில் 1000 அடி நீளம், 500 அடி அகலத்தில் திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் பிரதான நுழைவு வாயில் பழைய நாடாளுமன்ற வடிவிலும், பக்க வாயில்கள் அம்பேத்கரின் நினைவிடம் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. விழா மேடை புதிய நாடாளுமன்ற கட்டிட வடிவில் 80 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
The post வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சியில் இன்று மாலை விசிக பிரமாண்ட மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்ேகற்பு appeared first on Dinakaran.
