×

பத்ம விருதுகள் பெற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் மற்றும் நடிகர் அஜித்குமார் ஆகியோருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் குறித்து எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளுள் ஒன்றான “பத்ம பூஷன்” விருது பெறத் தேர்வாகியுள்ள தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், கலை, விளையாட்டு, ட்ரோன் வடிவமைப்பு என பல்துறைகளில் தனக்கென தனிமுத்திரை பதித்துள்ள அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இன்னும் பல சிகரங்களைத் தொட்டு, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் புகழ் சேர்க்க வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்; “உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராகத் திகழ்ந்து, தனது பல்வேறு சாதனைகளால் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த அருமைச் சகோதரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The post பத்ம விருதுகள் பெற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் மற்றும் நடிகர் அஜித்குமார் ஆகியோருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMI ,ASWIN ,AJIT KUMAR ,Chennai ,Padmasri ,Eadapadi Palanisami ,Eadapadi Palanisamy ,X ,Edapadi Palanisami ,
× RELATED “இன்னும் ஓரிரு நாளில் நம் கூட்டணியில்...