- ஆர்.எஸ்.மங்கலம்
- வண்டல்-ஆனந்தூர்
- ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம்
- வரவாணி பஞ்சாயத்து
- Sathamangalam
- கூடம்புலி
- தின மலர்
ஆர்.எஸ்.மங்கலம்,ஜன.26:ஆர்.எஸ்.மங்கலம் அருகே வண்டல்-ஆனந்தூர் இணைப்பு சாலை சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்களும், பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் அச்சாலையை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் வரவணி ஊராட்சி சாத்தமங்கலம், கூட்டாம்புளி விலக்கு முதல் அய்யனார் கோயில், கண்மாய் கழுங்கு வழியாக அளவிடங்கான், வண்டல் செல்லும் வண்டல்-ஆனந்தூர் இணைப்பு சாலை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகவும் மோசமாக உள்ளது.
இச்சாலை கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், எந்தவித பராமரிப்பும் செய்யப்படாமல் இந்த சாலை தற்போது மிகவும் மோசமாக சேதம் அடைந்து மண் சலையாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
The post சாலையில் நடந்து செல்ல முடியவில்லை சீரமைக்க மக்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.
