×

மது ஊற்றி கொடுத்து புதுச்சேரி இளம்பெண் கூட்டு பலாத்காரம்: ரயில்வே கார்டு, அரசு பஸ் டிரைவர் கைது

நெல்லை: நெல்லை அருகே மது ஊற்றிக் கொடுத்து புதுச்சேரி இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த ரயில்வே கார்டு, அரசு பஸ் டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் மானூரை அடுத்த வெங்கலபொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (37). மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ரயில்வே கார்டாக பணியாற்றி வருகிறார். ரயில் பணியில் கேரள மாநிலத்துக்கு செல்லும்போது புதுச்சேரியை சேர்ந்த 29 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர், திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக வேலை செய்துள்ளார். அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பிரசங்கத்தில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் ரயிலில் வரும்போது சுபாசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரும் இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி அடிக்கடி பேசி வந்துள்ளார். அவருக்க பல்வேறு உதவிகளை சுபாஷ் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுபாஷ், குடும்பத்தினரை வெளியூருக்கு அனுப்பி விட்டு பார்ட்டி வைப்பதாகக் கூறி இளம்பெண்ணை நெல்லைக்கு வரவழைத்து உள்ளார். இங்கு பிரபல பாரில் இருவரும் மதுகுடித்து பார்ட்டி கொண்டாடி உள்ளனர். போதை ஏறியதும் இளம்பெண் மயக்கத்தில் இருந்துள்ளார். அப்போது அவரை சுபாஷ், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் அவரது நண்பரான ரஸ்தா பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் முருகேசன் (37) என்பவரையும் அழைத்து அவரும் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. போதை தெளிந்த இளம்பெண், சுபாஷ் மற்றும் முருகேசன் பிடியில் இருந்து தப்பி உறவினர்கள் மூலம் நெல்லை மாநகர காவல் துறையில் புகார் செய்தார். இளம்பெண் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பதால் சம்பவ இடத்தை அவரால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. வழியில் தச்சநல்லூர் என்ற போர்டை பார்த்தாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார், தச்சநல்லூர் பகுதியை சுற்றிக்காட்டி சென்ற வழியை அடையாளம் காட்டுமாறு கூறினர். அப்போது ஒரு போர்டை பார்த்ததும் இளம்பெண், இவ்வழியாக சென்றதாக சுட்டிக்காட்டி உள்ளார். இதைத் தொடர்ந்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் ரயில்வேயில் வேலை செய்வோர் பட்டியலை எடுத்து சுபாசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையை அடுத்து முருகேசனும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து நெல்லை தாலூகா அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சுபாஷ், முருகேசன் ஆகியோரை நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை. மத்திய சிறையில் அடைத்தனர்.

The post மது ஊற்றி கொடுத்து புதுச்சேரி இளம்பெண் கூட்டு பலாத்காரம்: ரயில்வே கார்டு, அரசு பஸ் டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nella ,Subash ,Wengalbotal ,Nella district Manur ,Dinakaran ,
× RELATED கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி...