*பொதுமக்கள் கோரிக்கை
கரூர் : கரூர் மாவட்டம் ஏமூர் ஊராட்சிக்கு செல்லும் சாலை பணியை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் மாநகராட்சியை ஒட்டி ஏமூர் ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஏமூர் ஊராட்சி பகுதிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உளள காரணத்தினால் அதனை சீரமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக, பொக்லைன் மூலம் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த பகுதிக்கு செல்லும் வாகன ஓடடிகளின் நலன் கருதி சாலை மேம்பாட்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் நடைபெற்று வரும் பணியை பார்வையிட்டு விரைந்து முடிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
The post ஏமூர் ஊராட்சிக்கு செல்லும் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.