×

கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜன.25: விருதுநகரில் ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர்கள் அலிபாத், உலகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு 70வது நிறைவடையும் போது கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 21 மாத ஓய்வூதிய நிலுவை மற்றும் அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டு மத்திய அரசு வழங்குவது போல் மாதம் ஆயிரம் மருத்துவபடி வழங்க வேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Tamil Nadu Retired Government Employees Association ,Alipath ,Ulaganathan ,District Treasury Office ,Virudhunagar Collectorate… ,Dinakaran ,
× RELATED கொலைக் குற்றவாளி குண்டாசில் கைது