கம்பம், ஜன. 25: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜன. 9ம் தேதி நடைபெற்ற அகில இந்திய அளவிலான தடகளப் போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கேற்று குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், வட்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கமும் வென்ற கம்பம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவன் தாரனேஷை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் கேடயம் மற்றும் சால்வை வழங்கி பாராட்டி கவுரவித்தார்.
மாணவனை பாராட்டி பள்ளி சார்பில் கம்பம் மெயின் ரோட்டில் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், மூத்த வழக்கறிஞர் துரை.நெப்போலியன், மதிமுக மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், நாகமணியம்மாள் பள்ளி தாளாளர் காந்தவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post இந்திய அளவில் தடகளப் போட்டியில் சாதனை கம்பம் மாணவனுக்கு தேனி எம்பி பாராட்டு appeared first on Dinakaran.