×

9 மாத ஆண் குழந்தை சாவு

தர்மபுரி, ஜன.25: தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ். இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு ஹரிகர சுதன் என்ற 9 மாத ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் மேகலா குழந்தை ஹரிகர சுதனுக்கு வழக்கம்போல் பால் புகட்டிவிட்டு தொட்டிலில் தூங்க வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, குழந்தை அசைவின்றி கிடந்தது. அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மேகலா, குழந்தையை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், கோபிநாதம்பட்டி போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டனர். தொடர்ந்து குழந்தையின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 9 மாத ஆண் குழந்தை சாவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Sadis ,Gopinathampatty Nagampatty ,Dharmapuri District Arur ,Meghan ,Harikara Sudan ,Megala ,Harikara Sudhan ,Dinakaran ,
× RELATED ஜவுளி சங்க பொதுக்குழு கூட்டம்