×

இந்தியா-இங்கிலாந்து டி-20 போட்டி பார்வையாளர்களுக்கு இலவச பயணம்: எம்டிசி அறிவிப்பு

தாம்பரம், ஜன.25: இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டியை முன்னிட்டு ஆன்லைன் அல்லது அச்சிட்ட டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் பார்வையாளர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கை: இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டி சென்னை, எம்ஏ சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இப்போட்டிகளை காணவரும் பார்வையாளர்கள் வசதிக்காக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துடன் மா.போ.கழகம் உரிய பயணக்கட்டணம் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் இந்த பேருந்துகளை இயக்குகிறது. இதன்படி, பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான ஆன்லைன் அல்லது அச்சிட்ட டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மாநகர பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த 3 மணி நேரத்திற்கு பின்னரும் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம். மேலும், சாதாரண கட்டண பேருந்துகளில் வழக்கம்போல் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். அரசினர் தோட்டம் மேட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் வரை மா.போ.கழக இணைப்பு பேருந்துகள் மாலை 4.00 மணி முதல் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது.

The post இந்தியா-இங்கிலாந்து டி-20 போட்டி பார்வையாளர்களுக்கு இலவச பயணம்: எம்டிசி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India-England T20 match ,MTC ,Tambaram ,Municipal Transport Corporation ,India… ,India-England T20 ,Dinakaran ,
× RELATED டி20 போட்டி:அரசு பேருந்துகளில் நாளை இலவச பயணம்