- 2ஆம் டி20ஐ
- இந்தியா, இங்கிலாந்து
- செபாக் ஸ்டேடியம்
- சென்னை
- இங்கிலாந்து கிரிக்கெட்
- ஜோஸ் பட்லர்
- இந்தியா
- டி 20 ஐயில்
- கொல்கத்தா
- இங்கிலாந்து
- தின மலர்
சென்னை: ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி.20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதலில் டி.20 தொடர் நடக்கிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டி.20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், 2வது போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று மாலை கொல்கத்தாவில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் இரு அணி வீரர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கினர். இன்று சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மேற்பார்வையில் வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங், பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச டி.20 போட்டி நடைபெற உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாளைய போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. நாளை வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியாவும், பதிலடி கொடுக்கும் கட்டாயத்தில் இங்கிலாந்தும் களம் இறங்கும்.
The post நாளை 2வது டி.20 போட்டி: சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, இங்கி. வீரர்கள் தீவிர பயிற்சி appeared first on Dinakaran.