- தர்மபுரி தவேகா அலுவலகம்
- தர்ணா தர்மபுரி
- ராஜா
- வினோபாஜ் தெரு, பொம்மிடி, தர்மபுரி மாவட்டம்
- விஜய்
- பொம்மிடி டவுன் பஞ்சாயத்து
- ஜனாதிபதி
- விஜய் மக்கள் இயக்கம்...
*தர்மபுரி தவெக ஆபிசில் நிர்வாகிகள் தர்ணா
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பொம்மிடி வினோபாஜ் தெருவை சேர்ந்த குழந்தை மகன் ராஜா(43). இவர் விஜய் ரசிகராக கடந்த 20 ஆண்டுகளாக உள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தில் பொம்மிடி பேரூராட்சி நகர தலைவராக இருந்து வந்தார். விஜய், தமிழக வெற்றிக்கழக கட்சி தொடங்கிய பின்னர், தற்போது பொறுப்பு நியமித்து வருகின்றனர்.
அந்த வகையில் ராஜா, பொம்மிடி நகர செயலாளருக்கு விண்ணப்பம் செய்தார். அதற்கான தொகையை செலுத்தி டிடி யும் எடுத்து அனுப்பினார். இந்நிலையில், வேறொரு நபரை பொம்மிடி பேரூர் செயலாளராக நியமித்துள்ளதாக ராஜாவுக்கு தகவல் கிடைத்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது ஆதரவாளர்கள் 15க்கும் மேற்பட்டோருடன், தர்மபுரியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ராஜா கூறுகையில், ‘விஜய் மக்கள் இயக்கத்தில் பொம்மிடி பேரூர் தலைவராக இருந்தேன். கட்சியில் எனக்கு நகர செயலாளர் பதவி தருவதாக கூறினர். ஆனால் தரவில்லை. உழைத்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படும் என்று தலைமை கூறியது.
ஆனால், இப்போது அவ்வாறு வழங்கவில்லை. பணம் இருப்பவர்கள் பக்கமே ஒருதலைபட்சமாக பாரபட்சத்துடன் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை அலுவலகத்தில் நியாயம் கேட்டு போராடுவோம். இல்லையென்றால் கட்சியில் இருந்து விலகி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்,’ என்றார்.
The post பதவி நியமனத்தில் பாரபட்சம் பணம் படைத்தவர்களுக்கே பொறுப்பு வழங்கப்படுகிறது appeared first on Dinakaran.
