- கவர்னர்
- தமிழ்
- தமிழ்நாடு
- துணை முதலமைச்சர்
- ஆத்யனிதி ஸ்டாலின்
- சென்னை
- உதயநிதி ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிற்பகல்
- தமிழ் கட்சி
- ஸ்டாலின்
- உதயநிதி ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டின் அடையாளங்களை அழிக்க ஆளுநர் முயற்சி செய்கிறார் என்று மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் இன்று அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நாதகவில் இருந்து அக்கட்சி உறுப்பினர்கள் திமுகவில் இணையும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தந்தை பெரியார் சிலை பரிசளித்தனர்.
சீமான் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த நா.த.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 38 மாவட்ட நிர்வாகிகள், கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நா.த.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தேர்தல் காலங்களில் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிரணியில்தான் அனைவரும் ஒன்று சேர்வார்கள். ஆனால், இன்று எதிர்க்கட்சியில் இருந்த நீங்கள், ஆளுங்கட்சியில் உங்களை இணைத்துள்ளீர்கள் என்றால் 2026 தேர்தல் முடிவுகள் உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடிய ஒன்றுதான். இதை பார்க்கும் போது எதிர்க்கட்சியினருக்கு வயிற்று எரிச்சல் வரத்தான் செய்யும். அதற்காகவே மீண்டும் உங்களுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறேன்.
நீங்கள் கழகத்தின் கொள்கையை ஏற்று இயக்கத்தில் சேர்ந்திருக்கின்றீர்கள். திமுக இன்று 75வது ஆண்டில் பவள விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் வந்து விட்டீர்கள், ஆனால் உங்களைப்போல ஆயிரக்கணக்கானோர் வருவதற்கு சில தயக்கத்தோடு அங்கு இருப்பார்கள். அவர்களிடம் எடுத்துச் சொல்லி, அத்தனை பேரையும் கழகத்தில் இணைக்க வேண்டிய முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்”
The post தமிழ்நாட்டின் அடையாளங்களை அழிக்க ஆளுநர் முயற்சி செய்கிறார்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.