×

சந்தன கட்டை கடத்தியவர் கைது

 

கோவை, ஜன.24: கோவை மாநகரில் திருட்டு, ரேஷன் அரிசி கடத்தல், கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பங்களை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சுந்தராபுரம் எல்ஐசி காலனியில் சுந்தராபுரம் போலீசார் நேற்று அதிகாலை 3 மணிக்கு வாகன சோதனையில் மேற்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 2 பைக்குகளில் வந்த 4 பேர் போலீசாரை கண்டவுடன் தப்பிச் செல்ல முயற்சித்தனர். போலீசார் அவர்களை பிடிக்க பின்தொடர்ந்து செல்லும்போது, அந்த 4 பேரில் ஒருவர் மட்டும் பைக்கில் இருந்து இறங்கிவிட்டார்.

மற்ற மூவரும் பைக்கில் தப்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பைக்கில் இருந்து இறங்கிய நபரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அந்த நபரிடம் 4 சந்தன கட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் பேரூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த முனியப்பன் (22) என்பதும், இவரிடம் இருந்த சந்தனக் கட்டைகள் கோவை பெரிய குயிளி பகுதியில் இருந்து வெட்டி வந்ததும் தெரியவந்தது. போலீசார் தப்பிச்சென்ற 3 பேரை பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சந்தன கட்டை கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sandalwood ,Coimbatore ,Sundarapuram LIC Colony… ,Dinakaran ,
× RELATED கோடியக்காட்டில் சந்தனக்கூடு பெருவிழா