×

கொசவன்புதூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கே.வி.குப்பம் தாலுகாவில் வரும் 29ம் தேதி

வேலூர், ஜன.24: வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் கே.வி.குப்பம் தாலுகா கொசவன்புதூர் கிராமத்தில் வரும் 29ம் தேதி கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து முன்கூட்டியே மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உரிய முறையில் விசாரணை செய்து அதன் விவரத்தினை மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் நலதிட்ட உதவிகள் சென்றடையும் வகையில் மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. மனுநீதி நாள் முகாம் நடைபெறும் வளாகத்தில் சம்மந்தப்பட்ட துறையின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்படும். எனவே, மனுதாரர்கள் மனுவில் தங்களது தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண்களை குறிப்பிட்டு உரிய ஆவணங்களுடன் தங்கள் மனுக்களை முன்கூட்டியே கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு அளித்து மனுநீதி நாள் முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கொசவன்புதூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கே.வி.குப்பம் தாலுகாவில் வரும் 29ம் தேதி appeared first on Dinakaran.

Tags : Human ,Rights ,Day ,Camp ,Kosavanputhur Village, K.V.Kuppam Taluk ,Vellore ,Collector ,Subbulakshmi ,Rights Day ,Kosavanputhur Village, ,K.V.Kuppam Taluk ,Human Rights Day ,Dinakaran ,
× RELATED மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து...