×

தூத்துக்குடி கலைஞர் நகரில் பேவர்பிளாக் சாலை பணிகள்

தூத்துக்குடி, ஜன. 24: தூத்துக்குடி கலைஞர் நகர் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார். தூத்துக்குடி மாநகராட்சி 7வது வார்டுக்குட்பட்ட கலைஞர் நகர் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்டச் செயலாளர்கள் தினகரன், ரவிச்சந்திரன், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் எமல்டன், தகவல் தொழில்நுட்ப அணி வட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்னோசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி கலைஞர் நகரில் பேவர்பிளாக் சாலை பணிகள் appeared first on Dinakaran.

Tags : Paverblock road ,Tuticorin ,Thoothukudi ,Minister ,Kitajeevan ,Paver Block Road ,Tuthukudi Artist Nagar ,Artist Nagar ,7th Ward ,Tuthukudi Municipality ,Paverblock ,Thoothukudi Artist City ,
× RELATED வெளிமாநில மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது