×

கலைஞர் கனவு இல்ல திட்டத்தை குறைபாடின்றி செயல்படுத்த வேண்டும்: அலுவலர்களுக்கு, கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்


ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு இடங்களில் செயல்படும் திட்டங்களை முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம், குன்னம் கிராம ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்து, இலகுவான முறையில் கல்வி கற்க ஆசிரியர்கள் செயல்பட அறிவுறுத்தினார்.

மேலும், குன்னம் ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் கட்டும் பணியினை ஆய்வு செய்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, அப்பகுதியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்து, குடியிருப்பில் அளவுகளை டேப் மூலம் நேரடியாக அளவிட்டு, வரைபடத்தில் உள்ள அளவுகளை ஒப்பிட்டு சரி பார்த்தபோது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது. உடனடியாக ஊராட்சி ஒன்றிய பொறியாளரை, அளவீடு செய்ய சொல்லி பொதுமக்களின் கனவுகளை நினைவாக்கும் விதமாக செயல்படும் இத்திட்டத்தில் அவர்களின் வசதிக்காகவும், அதேநேரம் எந்தவித குறைபாடுகள் இன்றி செயல்படுத்த வேண்டும் என எச்சரிக்கும் வகையில் தெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர் ஆர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் இலக்கியா பார்த்திபன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post கலைஞர் கனவு இல்ல திட்டத்தை குறைபாடின்றி செயல்படுத்த வேண்டும்: அலுவலர்களுக்கு, கண்காணிப்பாளர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kalaignar Dream Home ,Sriperumbudur ,Kanchipuram district ,Senthilkumar ,Kanchipuram ,District ,Sriperumbudur… ,Dinakaran ,
× RELATED பால்நல்லூர் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு