×

பொங்கல் விடுமுறை, கொரோனா தொற்று பரவல் எதிரொலி: சென்னையில் 32 விமானங்கள் ரத்து..பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தது

மீனம்பாக்கம்: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை மற்றும் கொரோனா வைரஸ், ஒமிக்ரான் பரவல் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையம் பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. நேற்று ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக 10 ஆயிரமாக குறைந்து. சென்னையில் கொரோனா வைரஸ் 3ம் அலை, ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுகிறது. இதனால் சென்னை உள்நாட்டு விமான விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைய தொடங்கின.கடந்த மாதத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்தில் இருந்து 34 ஆயிரம் வரை இருந்த பயணிகள் எண்ணிக்கை கடந்த வாரம் 20 ஆயிரமாக குறைந்து விட்டது. இதனால் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையும் 270ல் இருந்து கடந்த வாரம் 206 ஆக குறைந்தது. தற்போது மேலும் குறைந்து 183 ஆகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை, கொரோனா வைரஸ் 3ம் அலை பரவல், ஒமிக்ரான் தொற்று அதிகரிப்புதான் என்று விமானநிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில் போதிய பயணிகள் இல்லாமல், சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் நேற்று ஒரே நாளில் வருகை, புறப்பாடு விமானங்கள் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு வரவேண்டிய பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், கொச்சி, மதுரை, தூத்துக்குடி, புனே, விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஞ்சி உள்ளிட்ட 16 விமானங்கள் மற்றும் சென்னையில் இருந்து இந்த நகரங்களுக்கு செல்ல வேண்டிய 16 விமானங்கள் என மொத்தம் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பயணிகள் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே உள்ளன. அடுத்து வரும் நாட்களில் மேலும் பல விமானங்கள் ரத்தாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. விமானங்கள் ரத்தனால், அதற்கான கட்டணம் பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அந்த டிக்கெட்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஏற்கனவே முன்பதிவு செய்த நகரங்களுக்கு மட்டும்தான் பயணிக்க வேண்டும் என்பதல்ல. உள்நாட்டு விமான பயணங்கள் எந்த நகராக இருந்தாலும் பயணிக்கலாம் என்று விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றனர்….

The post பொங்கல் விடுமுறை, கொரோனா தொற்று பரவல் எதிரொலி: சென்னையில் 32 விமானங்கள் ரத்து..பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Pongal Holidays ,Chennai ,Fishenambakkam ,Pongal festive series ,Chennai inland airport ,Corona ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...