- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
- காமகோடி
- சென்னை
- ஜனாதிபதி
- திருநாவுக்கரசு
- சென்னை பிரஸ் ஃபோரம்
- ஐஐடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அறிவியல் இயக்கம்
சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் திருநாவுக்கரசு கூறியதாவது: ஐஐடி இயக்குனர் காமகோடி, கோமியம் மருத்துவக் குணங்கள் கொண்டது. அதனைக் குடித்தால் நோய்கள் குணமடையும் என்று பேசியுள்ளார். ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் அவரது தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த அல்லது தற்போதைய அரசியல் சூழலில் அவருக்கு சுயநலன் சார்ந்த காரணங்களுக்காகவும் மற்றும் அடிப்படைவாதக் கருத்துக்களை முன்னெடுக்கும் நோக்கத்தில் அறிவியல் அடிப்படை இல்லாத ஆபத்து நிறைந்த கருத்துக்களைப் பரப்புவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
The post கோமியம் குறித்த காமகோடி கருத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கண்டனம் appeared first on Dinakaran.