தூத்துக்குடி: பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரிக்கு வந்த ஒரு இ-மெயிலில், தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், சேலம் மாவட்டம், தலைவாசலில் உள்ள கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் கோவையில் ஐஎஸ்ஐ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. முதல்கட்ட விசாரணையில், ‘திருச்சி சிறையில் உள்ள மாவோயிஸ்ட் செங்குட்டுவன் மாறன் என்பவரை விடுவிக்க வேண்டும் என்பதற்காக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
The post தூத்துக்குடி விமான நிலையம், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.