திருப்போரூர்: திருப்போரூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், யாசகம் பெற்றவர் பரிதாபமாக பலியானார். கேளம்பாக்கம் அடுத்த தையூர், பழைய மாமல்லபுரம் சாலையோரத்தில் நேற்று அதிகாலை 3 மணிக்கு வாகனத்தில் அடிபட்டு ஒருவர் தலை நசுங்கி இறந்துகிடப்பதாக, கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார். 40வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்துகிடந்த நபர் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் யாசகம் பெற்று சாலையில் சுற்றித்திரிந்ததும், சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சாலை விபத்தில் யாசகம் பெற்றவர் பலி appeared first on Dinakaran.